| ADDED : டிச 04, 2025 02:36 AM
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் மலையடிவாரத்தில், பழமையான மருந்தீஸ்வரர் சமேத இருள் நீங்கி தாயார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அன்று மாலை மலை மீது, 111 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். கடந்த ஒரு வாரமாக, இதற்கான பணிகளில் சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டனர். நேற்று காலை, கொப்பரை மற்றும் நெய், எண்ணெய் உள்ளிட்டவை மலை மீது பக்தர்களால் கொண்டு செல்லப்பட்டன. கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் நடந்தன. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசையுடன் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிங்கபெருமாள் கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.