உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாராயம் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

சாராயம் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

செங்கல்பட்டு: கொளத்துாரில், சாராயம் விற்பனை செய்த வாலிபரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். செய்யூர் அடுத்த, கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி, 27, என்பவர், கள்ளச் சாராயம் மற்றும் புதுச்சேரி மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளார். மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடந்த அக்., மாதம் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். அதன் பின், பசுபதி மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார். இதையேற்று, பசுபதியை குண்டர் சட்டத்தில் அடைக்க, கலெக்டர் சினேகா, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மாவட்ட சிறையில் இருந்த பசுபதியிடம், குண்டர் சட்ட நகலை வழங்கி, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி