உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வதேச சிலம்பம் போட்டி சென்னை சிறுவனுக்கு தங்கம்

சர்வதேச சிலம்பம் போட்டி சென்னை சிறுவனுக்கு தங்கம்

சென்னை, மலேஷியாவில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில், சென்னை சிறுவன் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.சர்வதேச சிலம்பம் கூட்டமைப்பு, மலேஷியா சிலம்பம் சங்கம் சார்பில், சர்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, மலேஷியா நாட்டில் சிலாங்கூர் மாநிலத்தில் நடந்தது.போட்டியில், பல்வேறு வயது பிரிவினருக்கும் ஒற்றை கொம்பு, வாள்வீச்சு, இரட்டை கொம்பு உள்ளிட்ட பலவித வகையாக போட்டிகள், தனித்தனியாக நடத்தப்பட்டன.இதில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.போட்டியில், இந்தியாவிலிருந்து, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த, பாலலோக் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் வெனய் ஸ்ரீராஜ், 14, பங்கேற்றார்.இவர், 16 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் திறமையை வெளிப்படுத்தி, ஒற்றை கம்பம் பிரிவில் வெண்கலமும், வாள்வீச்சு பிரிவில் தங்கமும் வென்று சாதனை படைத்தார். சென்னை, சின்மயா நகரிலுள்ள நேதாஜி சிலம்பம் அகாடமியில், பயிற்சியாளர் சுபாஷ் பாண்டியிடம் பயிற்சி பெறும் இவர் ஏற்கனவே, கண்களை மூடியபடி, ஒற்றை குச்சியில் இடைவிடாமல் ஆறு மணிநேரம், 30 நிமிடமும், இரட்டை குச்சியில் இரண்டு மணிநேரமும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.தற்போது, சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற இவரை, பெற்றோர் மற்றும் பலதரப்பினர் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்