உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண்தானம் வழங்க முன்வாருங்கள் நடைபயணத்தில் 1,000 பேர் பங்கேற்பு

கண்தானம் வழங்க முன்வாருங்கள் நடைபயணத்தில் 1,000 பேர் பங்கேற்பு

சென்னை:தேசிய கண்தானம், ஆக., 25 முதல் செப்., 8ம் தேதி வரை சிறப்பிக்கப்படுகிறது. இதையொட்டி, ராஜன் கண் மருத்துவமனை சார்பில், ரோட்டரி ராஜன் கண் வங்கி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் -தி.நகர் இணைந்து, பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று, விழிப்புணர்வு பேரணி நடத்தின.முன்னதாக, கண் தானம் வழங்குவோர், அதற்கான அட்டையில் கையெழுத்திட்டனர். அதில், 'நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண் தானம் செய்யுங்கள்' என எழுதப்பட்டிருந்தது.பிரபல நடிகை சுஹாசினி, பேரணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் 5 கல்லுாரிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதுகுறித்து ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர் மோகன் ராஜன் கூறியதாவது:இந்தியாவில் கருவிழி பாதித்தவர்கள் அதிகம் உள்ளனர். இறந்த பின் கண்களை தானம் செய்தால் தான், கருவிழி பாதித்தவர்களுக்கு பொருத்த முடியும்.பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சென்னையில், தினமும் 90 பேர் இறக்கின்றனர். இதில், 20 பேரின் கண்கள் தான் தானமாக கிடைக்கின்றன. விழிப்புணர்வால், முன்பைவிட தானம் செய்வோர் அதிகரித்து உள்ளனர்.சென்னையில் கண் வங்கி உள்ளது. கண் தானம் செய்ய விரும்புவோர் அருகில் உள்ள கண் மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம். கண்களை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாதீர்கள்; தானமாக வழங்குங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ