உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 12 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது

12 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது

பூந்தமல்லி, பூந்தமல்லியில் உள்ள வெளியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லி மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு, சந்தேகத்திற்கு இடமாக திரிந்த இருவரை பிடித்தனர். சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பிடிபட்டோர், துாத்துக்குடியைச் சேர்ந்த சுடலைமணிகண்டன், 23, திருநெல்வேலி முத்துராஜ், 45, என்பது தெரிய வந்தது.இவர்கள், வெளிமாநிலங்கலில் இருந்து ரயிலில் கஞ்சா எடுத்து வந்து, பூந்தமல்லி சுற்றுபுறத்தில் சில்லரை விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ