| ADDED : ஜூலை 09, 2024 12:11 AM
சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து வருகை,புறப்பாடு என 14 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.சென்னையில் இருந்து கோல்கட்டா, பெங்களூரு, கவுகாத்தி, ஹைதராபாத் செல்லும்' ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானங்கள், மும்பை செல்லும் 'இண்டிகோ' மற்றும் 'ஏர் இந்தியா' விமானங்கள், சீரடி செல்லும் 'ஸ்பைஸ்ஜெட்' என, ஏழு புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. மேலும், மும்பை, ஹைதராபாத் உள்பட, ஏழு இடங்களில் இருந்து சென்னை வர வேண்டிய வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து லண்டன் செல்லும் 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம், ஐந்து மணி நேரம் தாமதாக புறப்பட்டு சென்றது. இதே போல, சிங்கப்பூர் செல்லும் 'ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், எட்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.' ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ்' சார்பில் கவுகாத்தி, பெங்களூரு, ஐதராபாத் செல்லும் விமானங்கள், கடந்த மூன்று நாட்களாக தாமதமாக புறப்படுவதும், சில சமயம் ரத்து செய்யப்படுவதாகவும் பயணியர் புகார் கூறுகின்றனர். பயணியர் வருகை குறைவு, நிர்வாக காரணங்களுக்காகவே விமான சேவையில் மாற்றம் ஏற்படுவதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன.