15 கிலோ கஞ்சா பூந்தமல்லியில் பறிமுதல்
பூந்தமல்லி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் மேம்பாலம் கீழ் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், அந்த இடத்திற்கு நேற்று சென்றனர்.அங்கு நின்றிருந்த, மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்தா, 32, என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த சாக்கு பையில் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவரிடம் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.