சென்னை ஏர்போர்ட்டில் 18 லட்சம் பேர் பயணம்
சென்னை, நாட்டிலுள்ள விமான நிலையங்களில், பயணம் செய்யும் பயணியர் எண்ணிக்கை குறித்த ஜூலை மாத தரவுகளை, விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், அதிக பயணியர் பயணம் செய்த விமான நிலையங்களின் பட்டியலில், 18.14 லட்சம் பேருடன் சென்னை விமான நிலையம் 5வது இடத்தில் உள்ளது.இங்கு, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் உள்நாட்டு பயணியர், 13.10 லட்சம் பேர், சர்வதேச பயணியர் 5.3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், கடந்தாண்டு ஜூலையில் 11.8 லட்சம் பேர் பயணம் செய்திருந்த நிலையில், நடப்பாண்டு 10.2 சதவீதம் அதிகரித்து 13.10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
மற்ற விமான நிலையங்களின் ஜூலை மாத விபரம்
டில்லி 63.8 லட்சம் மும்பை 43.7 லட்சம்பெங்களூரு 32.91 லட்சம்ஹைதராபாத் 22.6 லட்சம்சென்னை 18.14லட்சம்