உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னைக்கு 2 ஏசி ரயில்

சென்னைக்கு 2 ஏசி ரயில்

சென்னை, சட்டசபையில் நேற்று வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், 'ஏசி' ரயில்களை இயக்க, ரயில்வே வாரியத்திடம் வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க, 12 பெட்டிகள் கொண்ட 'ஏசி' வசதியுள்ள, இரண்டு மின்சார யூனிட் ரயில்கள் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம் மேலாண்மை: சென்னை பெருநகரில் போக்குவரத்து சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைக்க, 'கும்டா' உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு வாயிலாக, சென்னை பெருநகருக்கான வாகன நிறுத்துமிட மேலாண்மை கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணங்களை பரிந்துரைக்கவும், இது தொடர்பான திட்டங்களுக்கு புதிய உத்திகளை அமல்படுத்தவும், கும்டாவின் கீழ் செயல்படும் வகையில் தனி பிரிவு ஏற்படுத்தப்படும். சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம், பேருந்து வழித்தட பின்னல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இடை நிலை போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்ட கால அட்டவணையை புரிந்து, அதற்கு ஏற்ப பேருந்து மற்றும் இடை நிலை போக்குவரத்து திட்டம் தயாரிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை