உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2 கோடி மதிப்பில் வடிகால் கே.கே.நகரில் பணிகள் தீவிரம்

ரூ.2 கோடி மதிப்பில் வடிகால் கே.கே.நகரில் பணிகள் தீவிரம்

கே.கே.நகர், கே.கே.நகர், ராணி அண்ணா நகர் குடியிருப்பில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண, 2 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு கே.கே.நகரில், ராணி அண்ணா நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவது வாடிக்கை. இதற்கு தீர்வு காணும் விதமாக, கே.கே.நகரில் 450 மீட்டர் துாரத்திற்கு, 2 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்க, மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது.இதையடுத்து, ராணி அண்ணா நகர் குடியிருப்பை ஒட்டியுள்ள, பி.டி., ராஜன் சாலையின் ஒரு பகுதியில் உள்ள பழைய மழைநீர் வடிகால் இடிக்கப்பட்டு, புது மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இப்பணிகள் முடிந்த நிலையில், இச்சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைத்து, அதை கே.கே.நகர் காமராஜர் சாலையில் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒரு வழிப்பாதையாக உள்ள பி.டி., ராஜன் சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.இப்பணிகள் நிறைவு பெற்ற பின், ராணி அண்ணா நகர் குடியிருப்பில் இருந்து வெளியேறும் மழைநீர், பி.டி., ராஜன் சாலை, காமராஜர் சாலை வழியாக அசோக் பில்லர் சாலை சென்று, அங்கிருந்து நெடுஞ்சாலை துறை மழைநீர் வடிகால் வழியாக அடையாற்றில் வெளியேறும். இதற்காக கே.கே.நகர் காமராஜர் சாலையில் உள்ள பழைய மழைநீர் வடிகாலை இடித்து, புது மழைநீர் வடிகால் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை