மேலும் செய்திகள்
மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி
3 hour(s) ago
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
3 hour(s) ago
ஜதியில் ஜொலித்த சஹானா
3 hour(s) ago
நாசாவின் சர்வதேச போட்டியில் ஈஸ்வரி கல்லுாரி சாதனை
3 hour(s) ago
ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், அரக்கோணம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் விஜயன் அறிமுக கூட்டம், நேற்று நடந்தது. அரக்கோணம் எம்.எல்.ஏ., ரவி பேசியதாவது:ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய மலர் உள்ளது. அது போல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஜெகத்ரட்சகன் தொகுதிக்கு வந்து செல்வார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது வந்த ஜெகத்ரட்சகன், தற்போது 2024ல் வந்துள்ளார். அடுத்ததாக, 2029 தேர்தலின் போது தான் தொகுதிக்கு வருவார்.இரண்டு சாராய ஆலைகளுக்கு அதிபதி, 26 கல்வி நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருக்கும் ஜெகத்ரட்சகன், தொகுதி மக்களுக்கு எப்படி தொண்டு செய்ய முடியும் என்பதை வாக்காளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.கடந்த சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தான், ஸ்டாலின் தற்போது மீண்டும் அளித்துள்ளார். அதாவது புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல் சொல்லியுள்ளார். ஜெயலலிதா, எதிரிகளை மட்டுமே எதிர்கொண்டார். ஆனால் பழனிசாமி, எதிரிகள், துரோகிகள் என பலரையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.அ.தி.மு.க., தொண்டர்கள் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி, நம் வேட்பாளர் விஜயனை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago