வேளச்சேரி நீலாங்கரையில் பாலியல் தொழில் 2 பேர் கைது
வேளச்சேரி:வேளச்சேரி, வீனஸ் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடப்பதாக, அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வேளச்சேரி போலீசார் சோதனை செய்தபோது, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவது தெரிந்தது. கணேசன், 24, என்ற நபரை கைது செய்து, ஒரு பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.கொட்டிவாக்கத்தில் ஒரு வீட்டில் மூன்று பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த வினோத், 30, என்பவரை, நீலாங்கரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.