உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூன்று மண்டலங்களில் 24 மணி நேரம் குடிநீர் ‛கட்

மூன்று மண்டலங்களில் 24 மணி நேரம் குடிநீர் ‛கட்

சென்னை, நெம்மேலியில் உள்ள, 11 கோடி லிட்டர் திறன் உடைய கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், வரும் 30ம் தேதி காலை 9:00 முதல் 1ம் தேதி காலை 9:00 மணி வரை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். அவசர தேவைக்கு, லாரி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை