உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க 31 கடைசி

ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க 31 கடைசி

சென்னை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும், வடசென்னை அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக சேரலாம். சிவில் இன்ஜினியரிங் அசிஸ்ட்ன்ட், டிராப்ட் ஸ்மேன், டர்னர், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக், ஏசி மெக்கானிக், இன்டீரியர் டிசைன், டிரோன் பைலட் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.பயிற்சியில் சேருவோருக்கு கட்டணம் கிடையாது. நிலையத்திலேயே தங்கி படிக்கவும் வசதிகள் உள்ளன. வயது வரம்பு கிடையாது. விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாளாகும்.மேலும் விபரங்களுக்கு, பயிற்சி நிலையத்தை அல்லது 044- 2520 9268 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ