உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மருந்துடன் 4 பேர் பிடிபட்டனர்

போதை மருந்துடன் 4 பேர் பிடிபட்டனர்

திருவொற்றியூர், திருவொற்றியூர் புதிய பேருந்து நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். அவரை சோதனையிட்ட போது, தடை செய்யப்பட்ட மெத் ஆம் பெட்டமைன் போதை பொருள் சிக்கியது.அவரிடம் விசாரித்தபோது, எம்.கே.பி., நகரில் உள்ள பெண்ணிடம் போதை பொருளை வாங்கி, கூட்டாளிகளுடன் சில்லரையாக விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து, எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த கிஷோர்குமார், 27, மதன், 18, கார்த்திக், 18, மற்றும் போதை பொருளை சப்ளை செய்த எம்.கே.பி., நகரைச் சேர்ந்த ஜரீனா சல்மா, 62, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து, 36 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை