உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ ரயில் நிலையங்களில் மேலும் 40 எஸ்கலேட்டர்கள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் மேலும் 40 எஸ்கலேட்டர்கள்

சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 40 எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்த, ஆறு மாதங்களில் இந்த பணியை முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணியர் வருகை அதிகமாக உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதன்படி, எழும்பூர், திருமங்கலம், அண்ணா நகர், ஆலந்துார், கோயம்பேடு, டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் மேலும் 40 எஸ்கலேட்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. தற்போது, இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. அடுத்த ஆறு மாதங்களில் இந்த பணிகள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ