உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை ஏர்போர்ட்டில் கடத்தல் அதிகரிப்பு 440 கிலோ தங்கம், 42 கிலோ போதை பறிமுதல்

சென்னை ஏர்போர்ட்டில் கடத்தல் அதிகரிப்பு 440 கிலோ தங்கம், 42 கிலோ போதை பறிமுதல்

சென்னை, சென்னை விமான நிலையத்தில் கடந்த நிதி ஆண்டில், 440 கிலோ தங்கம், 42.68 கிலோ போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்தில் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்காக, பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு கரன்சி, வெளிநாட்டு அரிய வகை வன உயிரினங்கள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.துபாய், அபுதாபி சார்ஜா, குவைத், இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து தங்கம், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப் பொருள், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிய வகை வன உயிரினங்கள் கடத்தி வரப்படுகின்றன. சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு கரன்சி கடத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமிகளை கைது செய்கின்றனர்.கடந்த 2023 - 24ம் நிதி ஆண்டில், 440 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 248 கோடி ரூபாய். அதுபோல், 192 கோடி ரூபாய் மதிப்புடைய 42.68 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 19.44 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாக்ஸ்

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்ஆண்டு தங்கம் போதை பொருட்கள் வெளிநாட்டு கரன்சி(மதிப்பு ரூபாயில்)2021-22 144.55 கிலோ - 33.72 கிலோ - 7.53 கோடி 2022-23 291 கிலோ - 21.39 கிலோ - 10.47 கோடி2023-24 440 கிலோ - 42.68 கிலோ - 19.44 கோடி

நேற்றும் சிக்கியது

4 கிலோ தங்கம் மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 'ஏர் ஏசியா' விமானம், நேற்று காலை சென்னை வந்தது. அதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதி, இரண்டு குழந்தைகள் என மொத்தம் ஆறு பேர் வந்தனர். அவர்களிடம் விசாரித்த போது வீட்டு வேலைக்காக மலேஷியா சென்றதாக கூறினர்.அவர்களை பரிசோதித்தபோது, நான்கு பேரின் உள்ளாடைகளுக்குள் தலா 1 கிலோ வீதம், 4 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், நான்கு பேரையும் கைது செய்து, தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை