உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சார ரயில் ரத்து எதிரொலி கூடுதலாக 50 பஸ்கள் இயக்கம்

மின்சார ரயில் ரத்து எதிரொலி கூடுதலாக 50 பஸ்கள் இயக்கம்

சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில், இன்று காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை, பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள், பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணியர் நலன் கருதி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள், இன்று இயக்கப்படும்.தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தியாகராய நகருக்கு 20 பேருந்துகள், பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். இப்பேருந்துகளின் இயக்கமும் கண்காணிக்கப்படும்.இவ்வாறு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

திருத்தணி ரயில் சேவை மாற்றம்

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணி நடப்பதால், சென்ட்ரல் - திருத்தணி தடத்தில், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்ட்ரல் - திருத்தணி காலை 10:00, 11:45 மணி ரயில்கள், வரும் 16, 18ம் தேதிகளில் அரக்கோணம் வரை மட்டுமே செல்லும்.திருத்தணி - சென்ட்ரல் மதியம் 12:35, மதியம் 2:20 மணி ரயில்கள், வரும் 16, 18ம் தேதிகளில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை