உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கராத்தே பட்டை வழங்கும் விழா 82 வீரர்கள் உற்சாக பங்கேற்பு

கராத்தே பட்டை வழங்கும் விழா 82 வீரர்கள் உற்சாக பங்கேற்பு

மேடவாக்கம்:கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கான பட்டை வழங்கும் நிகழ்ச்சி, மேடவாக்கத்தில் நேற்று நடந்தது.பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கத்தில் இயங்கிவரும் சென்கோன் இஷின் -ரியூ கராத்தே கொபுடோ அமைப்பு சார்பில், கராத்தே பயிற்சி பெற்றவர்களுக்கான போட்டித் தேர்வு நிகழ்ச்சிகள், அதே பகுதியில் உள்ள அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்ட் அகாடமி வளாகத்தில், கடந்த வாரம் நடந்தன.அதன்படி, கராத்தே பயிற்சி பெற்ற வீரர்களுக்கு வயது மற்றும் பிரிவின்படி கட்டாகுமிட், ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 5 வயது முதல் 21 வயது வரையிலான 82 வீரர்கள் பங்கேற்று, தங்கள் திறமையை நிரூபித்தனர். அத்தேர்வில் வெற்றி பெற்றோருக்கு, அந்தந்த பிரிவுக்குரிய நிறத்திலான பட்டை வழங்கும் நிகழ்ச்சி, மேடவாக்கத்தில் குமரன் மஹாலில் நேற்று நடந்தது. போட்டியில் பங்கேற்ற 82 மாணவர்களில் இரண்டு பேர், கருப்பு நிற பட்டை பெற்றனர்.தவிர மஞ்சள் பட்டை 23 வீரர்களுக்கு வழங்கப்பட்டது. நீல வண்ண பட்டை 16 பேருக்கும், பச்சை பட்டை 17 பேருக்கும், பர்பிள் பட்டை 13 பேருக்கம், பிரவுன் பட்டை 11 பேருக்கும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, தஞ்சை மாவட்ட டேக்வாண்டோ செயலர் உத்திராபதி, கருப்பு பட்டை ஏழாவது நிலை பயிற்சியாளர் அஜய் பெருமாள் ஆகியோர் பங்கேற்று, சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ