உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி சாலையில் தீப்பற்றி எரிந்தது கார்

பூந்தமல்லி சாலையில் தீப்பற்றி எரிந்தது கார்

பூந்தமல்லி:பூந்தமல்லி டிரங் ரோட்டில், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நேற்று 'ஹூண்டாய் வெர்னா' காரின் முன்பகுதியில் திடீரென அதிக புகை வெளியேறியது. சற்று நேரத்தில் தீ பற்றி எரியத் துவங்கியது. சுதாரித்த ஓட்டுனர் தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள், காரில் இருந்து உடனே வெளியேறினர்.அப்பகுதியில் உள்ள சிலர், தீயணைப்பான் கருகிகளை பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரின் முன்பகுதி எரிந்து நாசமானது. பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை