உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயக்க மருந்து கலந்து சில்மிஷம் குருக்கள் மீது வழக்கு பதிவு

மயக்க மருந்து கலந்து சில்மிஷம் குருக்கள் மீது வழக்கு பதிவு

சென்னை, தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து விட்டதாக, கோவில் குருக்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சாலிகிராமத்தைச் சேர்ந்த, 30 வயது பெண், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க்கிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.அதில் புகார்தாரர் கூறியிருப்பதாவது:பாரிமுனையில் உள்ள பிரபலமான அம்மன் கோவிலுக்கு வாரந்தோறும் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்போது, அங்கிருந்த குருக்கள் கார்த்திக் முனுசாமி என்பவர், அறிமுகம் ஆனார். ஒருமுறை அவர், என் வீட்டுக்கு வந்தார். அவர் கையில் வைத்திருந்ததை, தீர்த்தம் எனக் கொடுத்தார். அதைக் குடித்தவுடன் மயங்கிவிட்டேன். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்னை, அவர் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கேட்டபோது, ஜாதகம் இருவருக்கும் ஒத்துப் போவதால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பின், நான் கர்ப்பம் அடைந்தேன். ஆனால் குருக்கள் கார்த்திக் முனுசாமி, என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைத்தார். மேலும், வீட்டிற்கு வி.ஐ.பி., ஒருவரை அழைத்து வந்து, அனுசரித்துச் செல்லுமாறு கூறினார். அவருக்கு திருமணமாகி மனைவி, மகள், மகன் உள்ளனர். என்னை ஏமாற்றிய குருக்கள் கார்த்திக் முனுசாமி, அவருக்கு உடந்தையாக உள்ள இரு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த புகார், விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, குருக்கள் கார்த்திக் முனுசாமி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ