| ADDED : ஜூலை 25, 2024 12:52 AM
அண்ணாசதுக்கம், மாநிலக் கல்லுாரி பின்புறம் உள்ள ரயில்வே பார்டர் சாலையில், நேற்று காலை தலையில் கல்லை போட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிலையில் ஆண் சடலம் கிடந்தது.இதை பார்த்த பகுதி வாசிகள், அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்த நிலையில், கொலையாளியான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 19, என்பவர் சிக்கினார். பெங்களூரைச் சேர்ந்த சுந்தர், 45, என்பவரும் கொலையாளி கார்த்திக்கும் கூலித்தொழிலாளிகள். இருவரும் நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். பின், மீண்டும் காசு கொடுத்து கார்த்திக் அந்த நபரிடம் மது வாங்கி வரக்கூறியுள்ளார்.மது வாங்கியது போக மீதமுள்ள பணத்தை சுந்தரிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கார்த்திக், கல்லை எடுத்து அதீத மதுபோதையில் இருந்த சுந்தரின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.கார்த்திக்கை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.