உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு திட்டத்தில் புரோக்கர் தலையிட்டால் புகார் தரலாம்

அரசு திட்டத்தில் புரோக்கர் தலையிட்டால் புகார் தரலாம்

சென்னை, ''அரசின், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தில், 'புரோக்கர்கள்' செயல்பாடுகள் இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இத்திட்டங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் எனச் சொல்லி தனி நபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ பணம் அல்லது வேறு வகையில் ஆதாயம் பெறும் நோக்கில் செயல்பட்டால், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளிக்கலாம். புகார்களை, 044- 2999 3612 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்