உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்மன் கோவில்களில் ஒருநாள் ஆடி சுற்றுலா

அம்மன் கோவில்களில் ஒருநாள் ஆடி சுற்றுலா

சென்னை, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் ஒருநாள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டம், வடசென்னை, தென் சென்னை என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை அலுவலகத்தில் இருந்து காலை 8:30 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:45 மணிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்சென்னை சுற்றுலா திட்டத்தில், மயிலாப்பூர் கற்பகாம்பாள், முண்டகக்கண்ணியம்மன், கோலவிழி அம்மன், தி.நகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காலியம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களில், தரிசனம் செய்யும் வகையில் செயல்படுகிறது. வடசென்னை திட்டத்தில், பாரிமுனை காளிகாம்பாள், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன், திருமுல்லைவாயில் திருவுடையம்மன், பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பரலியம்மன் ஆகிய கோவில்களில் தரிசனம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டங்களுக்கு, தென் சென்னைக்கு 800 ரூபாய், வடசென்னைக்கு 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை, www.ttdconline.comஎன்ற இணையதளத்தில் புக் செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு 044 - 2533 3333, 2533 3444, 2533 3857 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, tamilnadutourism.tn.gov.inஎன்ற இணையதளங்களில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ