உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நள்ளிரவில் கையை அறுத்து ஓடிய போதை ஆசாமி

நள்ளிரவில் கையை அறுத்து ஓடிய போதை ஆசாமி

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, இளைய முதலி தெருவில் தண்டையார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அவ்வழியே பைக்கில் வந்த நபரை நிறுத்தினர். அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.பின், போலீசார் 'பிரீத்திங் அனலைசர்' கருவி மூலம் அவரை சோதனை செய்தபோது, மது அருந்தி இருந்ததன் அளவு அதிகமாக காட்டியது.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது. போலீசார் அபராத ரசீது கொடுத்த நிலையில், சீனிவாசன் துாக்கி ஏறிந்ததோடு, கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து தனக்குத்தானே கையை வெட்டிக் கொண்டார். மேலும், போலீசாருக்கு மிரட்டல் விடுத்து தப்பினார்.தண்டையார்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி