உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பஸ் மீது லாரி உரசி சிறுமி காயம்

அரசு பஸ் மீது லாரி உரசி சிறுமி காயம்

படப்பை, அரசு பஸ் மீது லாரி உரசியதில், 3 வயது சிறுமி, நேற்று காயமடைந்தார். குன்றத்துாரில் இருந்து சோமங்கலம் வழியாக, தாம்பரம் நோக்கி அரசு பேருந்து தடம் எண்: 18எஸ், பயணியருடன் நேற்று சென்றது.சோமங்கலம் அடுத்த மேலாத்துார் வனப்பகுதியை கடந்து சென்ற பேருந்தை, பின்னால் சென்ற டிப்பர் லாரி முந்தி செல்ல முயன்றபோது, பேருந்து மீது உரசியது. பேருந்து லேசாக சேதமடைந்தது பேருந்தில் பயணித்த 3 வயது சிறுமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. சிறுமி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடு திரும்பினார். இது குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி