உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல கோடி ரூபாய் மோசடி நிதி நிறுவனம் முற்றுகை 

பல கோடி ரூபாய் மோசடி நிதி நிறுவனம் முற்றுகை 

மயிலாப்பூர்,பல கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பாக, மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர்.சென்னை, மயிலாப்பூர், தெற்கு மாடவீதியில் 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனம்' பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முதலீடு பணத்திற்கு, 10 முதல் 11 சதவீதம் வரையில் வட்டி தருவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு லட்சம் ரூபாயில் இருந்து மூன்று கோடி ரூபாய் வரையில் நிரந்தர வைப்பு தொகை வைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு, கடந்த ஆறு மாதங்களாக, எந்தவித வட்டியும் வழங்கப்படவில்லை என தகவல் பரவியது. இதையடுத்து, நேற்று காலை மயிலாப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை, நிதிநிறுவன முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர். சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். இந்த நிதி நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனராக இருப்பவர் தேவநாதன். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை