உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடனுக்கு ஜ ி.எஸ்.டி., ரூ.70,000 இழந்த நபர்

கடனுக்கு ஜ ி.எஸ்.டி., ரூ.70,000 இழந்த நபர்

பெரவள்ளூர், கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் ராஜவேல், 35; பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வார்டு பாய்.கடந்த 9ம் தேதி 'இன்ஸ்டாகிராம்' வலை பக்கத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, 'ரிலையன்ஸ் ஆப்' நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அத்தொகைக்கு ஜி.எஸ்.டி., தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 70,000 ரூபாய் முன்பணமாக கட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதை நம்பிய ராஜவேல், 'ஜிபே' வாயிலாக 70,000 ரூபாய் கட்டியுள்ளார். ஆனால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கவில்லை.போலி 'ஆப்' வாயிலாக ஏமாற்றப்பட்டதை அறிந்து, பெரவள்ளூர் போலீசில் புகார் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ