தீக்கிரையான பை கடை ரூ.10 லட்சம் மதிப்பில் நாசம்
ஆவடி, திருமுல்லைவாயில், அம்பேத்கர் நகர், மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 32. இவர், சி.டி.எச்., சாலையில் ஏ.கே.எம்., பேக் வேர்ல்டு எனும் பெயரில், காலணிகள், பொம்மைகள், ஸ்கூல் பேக்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை, அவரது கடையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து, ஆவடி, அம்பத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.அதற்குள் கடையில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து, திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.