உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீடியனில் பாய்ந்த பைக் கை துண்டாகி வாலிபர் பலி

மீடியனில் பாய்ந்த பைக் கை துண்டாகி வாலிபர் பலி

கொட்டிவாக்கம், வெட்டுவாங்கேணி, கற்பக விநாயகர் ஐந்தாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் விக்னேஷ், 25; பெயின்டர். இவர், தன் 'பஜாஜ் பல்சர்' பைக்கில், அடையாறில் இருந்து இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்று காலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.கொட்டிவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, இவரது கட்டுப்பாட்டை இழந்த பைக் மீடியனில் மோதியது. இதில், வலது கை துண்டான நிலையில் விக்னேஷ் துாக்கி வீசப்பட்டார். 'ஹெல்மெட்' அணியாததால், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.இதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள்,அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாயிலாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிர் இழந்தார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ