உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதையில் கம்பி பாதசாரிகளுக்கு ஆபத்து

நடைபாதையில் கம்பி பாதசாரிகளுக்கு ஆபத்து

அண்ணாசாலை, அண்ணாசாலையில், மன்றோ சிலை அருகே நடைபாதையில் தெரு விளக்கிற்காக வைக்கப்பட்ட இரும்புக் கம்பியில், பாதசாரிகள் தவறி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.இச்சாலையில் ஐந்து மாதத்திற்கு முன் தெருவிளக்கு அமைக்க, நடைபாதையில் கம்பிகள் அமைக்கப்பட்டன.ஆனால், இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் கால் இடறி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.நேற்று முன்தினம் இரவு ஈ.வெ.ரா., சாலை பெரியமேடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.அப்போது, சென்டர் மீடியனில் நீட்டிக்கொண்டிருந்த கம்பி, பெண்ணின் கையில் ஒருபுறம் குத்தி, மறுபுறம் வெளியே வந்தது.இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதற்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ