உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூ வாங்க வந்தபோது லாரி மோதி பெண் பலி

பூ வாங்க வந்தபோது லாரி மோதி பெண் பலி

கோயம்பேடு:அம்பத்தூார், புதூார் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 46. இவரது மனைவி ராதிகா, 44; பூ வியாபாரி. நேற்று முன்தினம் கோயம்பேடுக்கு பூ வாங்குவதற்கு ஸ்கூட்டரில் வந்தார்.'கோயம்பேடு -- பி' சாலை வழியாக சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் நாகநாதன், 51, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ