உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாக்டரிடம் ரூ.1 லட்சம் நுாதனமாக அபேஸ்

டாக்டரிடம் ரூ.1 லட்சம் நுாதனமாக அபேஸ்

வடக்கு கடற்கரை:மண்ணடியைச் சேர்ந்தவர் முஸ்தான் அஜிஸ், 27. இவர், எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு, முதுநிலை படிப்பில் சேர படித்து வருகிறார்.'மணி பேக்' என்ற 'ஆன்லைன்' செயலியில் பணம் செலுத்தினால், இரு மடங்கு பணம் கிடைக்கும் என, இவரது நண்பர்கள் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளனர்.இதை நம்பி அந்த செயலியில், 5 தவணைகளில், 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை, 'ஆன்லைன்' வாயிலாக பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.பின், இவரது மொபைல்போன் எண்ணை, அவர்கள் 'பிளாக்' செய்துள்ளனர். அவர்களின் மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது, அந்த எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.இதுகுறித்து முஸ்தான் அஜிஸ், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ