உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடு குறுக்கே ஓடியதால் விபத்து: கணவன் கண்முன் மனைவி பலி

மாடு குறுக்கே ஓடியதால் விபத்து: கணவன் கண்முன் மனைவி பலி

கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காரணை புதுச்சேரியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 56. இவரது மனைவி விஜயா, 54.கட்டட தொழிலாளிகளான இருவரும், நேற்று காலை செங்கல்பட்டில் இருந்து ஊரப்பாக்கத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.சீனிவாசபுரம் சிக்னல் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் மாடு குறுக்கே ஓடியதால், நிலை தடுமாறிய இருசக்கர வாகனம், முன்னால் சென்ற காரில் மோதியது; இருவரும் சாலையில் விழுந்தனர்.இதில், விஜயாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்தோர், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய செல்வராஜை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விஜயாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி