உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செப்., முதல் இலங்கைக்கு கூடுதல் விமான சேவை

செப்., முதல் இலங்கைக்கு கூடுதல் விமான சேவை

சென்னை, சென்னையில் இருந்து இலங்கை, யாழ்ப்பாணம் நகருக்கு அடுத்த மாதம் முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் நேரடி விமான சேவையை துவங்குகிறது.சென்னை - யாழ்ப்பாணத்திற்கு காலை 10:55 மணிக்கு 'அலையன்ஸ் ஏர்' நிறுவனம் விமான சேவை வழங்கி வந்தது. சுற்றுலா பயணியர் இலங்கை செல்ல ஆர்வம் காட்டுவதால், கூடுதல் விமான சேவை தேவை என, கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், செப்., 1 முதல், இருந்து சென்னை -யாழ்ப்பாணம் - சென்னை இடையே, தினசரி நேரடி விமான சேவையை துவங்க உள்ளது.இதன்படி, தினசரி மதியம் 1:55 மணிக்கு புறப்படும் விமானம், யாழ்ப்பாணத்திற்கு 3:10 மணிக்கு சென்றடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து 3:55 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 5:10 மணிக்கு சென்னை வந்தடையும். ஒருவழிக் கட்டணமாக, 7,604 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ