உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 6 ஆண்டுகளுக்கு பின் நந்தனத்தில் இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி

6 ஆண்டுகளுக்கு பின் நந்தனத்தில் இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி

சென்னை, ஆறு ஆண்டுகளுக்கு பின், சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி, இன்று நடக்கிறது.பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இன்று மாலை 6:30 மணிக்கு, 'Truly live in concert' என்ற இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்நிகழ்ச்சியில், அவரது பல்வேறு எவர்கிரீன் பாடல்கள் பாடப்பட இருக்கின்றன. இளையராஜாவுடன் விபாவரி, ஸ்வேதா மோகன், எஸ்.பி.பி.சரண், ஹரி சரண், மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாட உள்ளனர். அத்துடன் நிகழ்ச்சியின் ஹைலைட்டாக, ஹங்கேரி இசைக் கலைஞர்களும் இசையமைக்க உள்ளனர்.அருண் ஈவன்ட் மற்றும் மெர்குரி நிறுவனத்தினர் இணைந்து, இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.போக்குவரத்து சிரமமின்றி மக்கள் வந்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு, அவசர உதவி, மருத்துவம், குடிநீர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோவில் இலவச பயணம்

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இன்று நடக்கும் இளையராஜா இன்னிசை கச்சேரிக்கு, மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.பிரத்யேக மெட்ரோ பாஸ்கள், கியூ.ஆர்., குறியீடு வசதியுடன் கச்சேரி டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது. அதை காண்பித்து, மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம். இதை வைத்து, ஒரு முறை மட்டுமே சென்று திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இது போன்ற ஒத்துழைப்பை வழங்க, சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ