உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுரவாயலில் தனித்தனி அறையில் இறந்து கிடந்த வயதான தம்பதி

மதுரவாயலில் தனித்தனி அறையில் இறந்து கிடந்த வயதான தம்பதி

மதுரவாயல், மதுரவாயலில் வயதான தம்பதி, ஒரே நாளில் தனித்தனி அறையில் இறந்து கிடந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரவாயல் ராஜிவ்காந்தி நகர், செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து காமாட்சி, 95. இவரது மனைவி பவுன், 87. இவர்கள், மூன்று மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இவர்களது மகன் பழனிவேல் என்பவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அறையில் அவரது தாய் பவுன் இறந்து கிடந்துள்ளார்.இதுகுறித்து அவரது தந்தையிடம் தெரிவிக்க தேடிய போது, அவரும் மற்றொரு அறையில் இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், இறந்து கிடந்த வயதான தம்பதி உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், கடந்த 20 நாட்களுக்கு முன், சொந்த ஊரான மதுரையில் நடந்த கோவில் திருவிழாவிற்கு, இருவரும் சென்றுள்ளனர்.அங்கிருந்து வந்த பின், சில நாட்களாக பவுன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். அவரது கணவர் முத்து காமாட்சி, மற்றொரு அறையில் தனியாக தங்கி இருந்ததும் தெரிந்தது. மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரது கணவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட பவுன் உயிரிழக்கவே, முத்து காமாட்சியும் அதே நேரத்தில் உயிரிழந்தது தெரிந்தது. மேலும், இவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கையாகவே இறந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என, பல கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.இத்தனை ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இணை பிரியாமல் இருந்து வந்த தம்பதி, இறப்பிலும் இணை பிரியாமல் இறந்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ