உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உயிர்பலி வாங்க காத்திருக்கும் திறந்தநிலை மழைநீர் கால்வாய்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் திறந்தநிலை மழைநீர் கால்வாய்

ஓட்டேரி,ஓட்டேரி குக்ஸ் சாலையில் உள்ள மழைநீர் கால்வாய் பராமரிப்பின்றி சேதமாகியுள்ளது. பல இடங்களில் மூடி இன்றி திறந்த நிலையிலேயே உள்ளது.குறிப்பாக, வாடியா நகர் அருகே நலவாழ்வு மருத்துவமனை மற்றும் பள்ளி அருகில் உள்ள பகுதியில், கால்வாய் மூடி உடைந்து உள்ளேயே விழுந்துள்ளது. இன்னும் சில இடங்களில் மூடி மட்டுமே தேவையின்றி வெளியே கிடக்கிறது.எனவே, உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, கால்வாய் மூடிகளை சரிசெய்ய வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை