உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமானத்தில் இறந்த அந்தமான் பயணி

விமானத்தில் இறந்த அந்தமான் பயணி

சென்னை:குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து, 174 பயணியருடன், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் சென்னைக்கு வந்தது.அதில், தெற்கு அந்தமானைச் சேர்ந்த சபித்ரி, 50, என்பவர், தன் கணவருடன் பயணித்தார். அவருக்கு, நடுவழியில் நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். நிலைமையை உணர்ந்த விமான கேப்டன், விரைவாக செயல்பட்டார். காலை 9:35 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானம், 9:17 மணிக்கே தரையிறங்கியது. உடனே, சபித்ரியை சோதனையிட்ட டாக்டர்கள், அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர். மற்ற பயணியர் இறங்கிய பின், அவர் உடல் இறக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை