ஹோட்டலில் தகராறு: மூவருக்கு காப்பு
ராமாபுரம், ஹோட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்து, அவரது மகனை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். ராமாபுரம், பூத்தப்பேடு பிரதான சாலையைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 47; அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி இவரது ஹோட்டலுக்கு வந்த முன்று மர்ம நபர்கள், சாப்பிட உணவு கேட்டு உள்ளனர்.அதற்கு, உணவுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாக, செந்தில்குமார் கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், செந்தில்குமாரை மிரட்டியதுடன்,அவரது மகன் பிரபு என்பவரை கல் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு சென்றனர். இதுகுறித்த புகாரை அடுத்து, ராமாபுரம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது ராமாபுரத்தைச் சேர்ந்தவர்களான ஆனந்தன் நகரைச் சேர்ந்த தீபக், 21, வெங்கடேஸ்வரன் நகர், 12வது தெருவைச் சேர்ந்த ஆகாஷ், 22, அண்ணா நகர் தாங்கல் தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார், 24, என தெரிந்தது.இவர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இதில், தீபக் மற்றும் பிரவீன் குமார் மீது, தலா ஒரு திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.