உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வக்கீல் ஆபீஸ் புகுந்து தாக்குதல் தி.மு.க., பிரமுகர் மகன் அடாவடி

வக்கீல் ஆபீஸ் புகுந்து தாக்குதல் தி.மு.க., பிரமுகர் மகன் அடாவடி

சென்னைபெசன்ட் நகரைச் சேர்ந்தவர் தி.மு.க., தென்சென்னை கிழக்கு பகுதி இளைஞரணி செயலர் விநாயகமூர்த்தி. இவரது மகன் தனுஷ், 20. நேற்று, பெசன்ட் நகர் எம்.ஜி., சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது, பின்னால் வந்த கார், பைக் மீது மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கார் ஓட்டுனரான வழக்கறிஞர் சஞ்சய், 25, தட்டிக் கேட்டுள்ளார்.இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. பகுதிவாசிகள், ரோந்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.இந்த நிலையில், தனுஷ் நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து, பெசன்ட் நகர், கலாேஷத்ரா காலனியில் உள்ள சஞ்சய்யின் அலுவலகத்தில் புகுந்தனர். அங்கு இருந்த சஞ்சயை தனுஷ் தாக்கினர். இது குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி