உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.டி.எம்., உடைத்து திருட முயற்சி

ஏ.டி.எம்., உடைத்து திருட முயற்சி

பெரம்பூர்:பெரம்பூர், படேல் சாலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த 18ம் தேதி இரவு 11:00 மணியளவில், ஏ.டி.எம்., உடைத்து பணம் திருட முயற்சி நடந்துள்ளது. இதன், லாக் உள்ள பகுதியை திருடன் உடைக்க முயற்சித்துள்ளான். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால், ஏ.டி.எம் மையத்தில் இருந்து அந்த நபர் வெளியேறியுள்ளார். இந்த காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.இதுகுறித்து 'ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீஸ்' நிறுவனத்தில் பணியாற்றும் சீனிவாசன், 37, என்பவர் அளித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி