உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி

பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி

மதுரவாயல் மேற்கு முகப்பேர் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் 58. நேற்று முன் தினம் வேலை விஷயமாக பஜாஜ் பிளாட்டினா பைக்கில் சென்றார்.தாம்பரம் --- மதுரவாயல் பைபாஸ் வானகரம் அருகே சென்ற போது பைக் மீது பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெய்சங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி