உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சில் மோதிய ஆட்டோ ஓட்டுனர் படுகாயம்

பஸ்சில் மோதிய ஆட்டோ ஓட்டுனர் படுகாயம்

தி.நகர், வில்லிவாக்கத்தில் இருந்து அடையாறு செல்லும் தடம் எண்: 47 மாநகர பேருந்து, தி.நகரில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. தி.நகர் வெங்கட் நாராயணன் சாலையில் சென்றபோது, ஓட்டுனர் திடீரென 'பிரேக்' பிடித்ததாகக் கூறப்படுகிறது.இதனால், பேருந்துக்கு பின்னால் வேகமாக வந்த ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில், ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியது.இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் நெற்குன்றத்தைச் சேர்ந்த கந்தன், 46, என்பவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து, பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை