உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையை மறித்து கழிவு நீரகற்று மையம் 30ல் இருந்து 8 அடியாக மாறிய அவலம்

சாலையை மறித்து கழிவு நீரகற்று மையம் 30ல் இருந்து 8 அடியாக மாறிய அவலம்

கொளத்துார், கொளத்துார், திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 65வது வார்டில் உள்ள முருகன் நகர் 4வது தெருவில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையிலேயே கழிவு நீரகற்று மையம் அமைக்கப்பட்டு உள்ளது.இதனால், 30 அடி சாலை 8 அடி சாலையாக குறுகி, அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அவ்வப்போது, சிறுசிறு விபத்தும் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் லேசான காயமடைந்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேணுகோபால், குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சிக்கு புகார் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் தெரிவித்து உள்ளதாவது:ஆரம்ப காலத்தில் கழிவு நீரகற்று மையத்தால் பாதிப்பு பெரிதாகத் தெரியவில்லை. தற்போது குடியிருப்புகளும், வாகன போக்குவரத்தும் அதிகரித்து விட்டன.இதனால், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கழிவு நீரகற்று மையத்தை உடனே வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், இதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ