உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அயனாவரம் - ஓட்டேரி மெட்ரோ வழித்தடம் சுரங்க பணியை நிறைவு செய்தது கொல்லி

அயனாவரம் - ஓட்டேரி மெட்ரோ வழித்தடம் சுரங்க பணியை நிறைவு செய்தது கொல்லி

சென்னை, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில், அயனாவரம் - ஓட்டேரி இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ., துாரத்துக்கு மூன்று வழித்தடங்களில் நடந்து வருகின்றன.அவை, மாதவரம் - - சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ., வழித்தடம்; கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் 26.1 கி.மீ., வழித்தடம் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லுார் 44.6 கி.மீ., வழித்தடம். இதில், யில் 39 மேம்பால நிலையங்கள் மற்றும் ஆறு சுரங்கப்பாதை நிலையங்கள் அமைய உள்ளன.இதில், மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஏழு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.இதில், அயனாவரம் - ஓட்டேரி வரையில் 903 மீ., துாரம் சுரங்கம் தோண்டும் பணி, கடந்தாண்டு ஜூலை 11ல் துவங்கப்பட்டது. 'கொல்லி' என பெயரிடப்பட்ட ராட்சத இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நிறைவு செய்து, வெற்றிகரமாக வெளியேறியது.இதுவரையில், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஏழு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன், கூடுதல் பொதுமேலாளர் கொல்லி வெங்கட ரமணா, டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவன திட்ட மேலாளர் அல்பர் வாஹித் யில்டிஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.அயனாவரம் மற்றும் ஓட்டேரிக்கு இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும். 100க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் எதிர்கொண்டு, மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த சுரங்கப்பாதை நிறைவு செய்யப்பட்டுள்ளது.- நிறுவன அதிகாரிகள்,சென்னை மெட்ரோ ரயில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை