மேலும் செய்திகள்
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கோரி ஆர்ப்பாட்டம்
07-Oct-2025
நாளைய மின் தடை
07-Oct-2025
அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 4வது பிரதான சாலையில் 11 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை போடப்பட்டது. தற்போது போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.சாலையில் பல இடங்களில், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழை காலத்தில் குட்டை போல் மழை நீர் தேங்கி, 'சாலை எது; பள்ளம் எது?' என தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல, அயப்பாக்கம்-- டோனோ கோலா கேம்ப் சாலை, பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. முக்கிய பிரதான சாலையாக விளங்கும் இந்த சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இரவு நேரத்தில், வாகனங்கள் பள்ளத்தில் தடுமாறி விபத்தில் சிக்குகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், மழைக்கு முன் இவ்விரு சாலைகளையும் சீரமைக்க முன்வர வேண்டும்.
07-Oct-2025
07-Oct-2025