உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்கள் தயாரித்த மூங்கில் சைக்கிள்

மாணவர்கள் தயாரித்த மூங்கில் சைக்கிள்

சென்னை : ஓ.எம்.ஆர்., செயின்ட் ஜோசப் கல்லுாரியில், நான்காம் ஆண்டு, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பயிலும், கோகுல்குமார், அபர்ணா, அருணாதேவி, டேனியல் ஆகியோர் சேர்ந்து, மூங்கில் சைக்கிள் தயாரித்துள்ளனர்.இது குறித்து, மாணவர் கோகுல்குமார் கூறியதாவது: பொதுவாக, பேட்டரி சைக்கிளில், லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படும். நாங்கள் தயாரித்த சைக்கிளில், லித்தியம் பெரோ பாஸ்பெட் 36வி, 12எ.எச்., என்ற பேட்டரி பயன்படுத்தி உள்ளோம். இதனால், தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்படும். குறைந்த நேரம் சார்ஜ் செய்தால் போதும். ஒருமுறை சார்ஜ் செய்தால், 30 கி.மீ., வேகத்தில், 40 கி.மீ., பயணிக்க முடியும்.சைக்கிளில் உள்ள சட்டங்கள், கல்மூங்கிலால் ஆனது. இரும்பின் உறுதித்தன்மை இதில் இருக்கும். சாதாரண பேட்டரி சைக்கிள், 42 கிலோ எடை கொண்டது. இந்த சைக்களின் எடை, 26 கிலோ. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை