உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் மீது லாரி மோதல் செங்கையில் தம்பதி பலி

பைக் மீது லாரி மோதல் செங்கையில் தம்பதி பலி

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த, பாலுாரைச் சேர்ந்த கங்காதரன், 52, தன் மனைவி அமுலு, 46, உடன், நேற்று காலை டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., இருசக்கர வாகனத்தில், செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.திம்மாவரம், பழவேட்டம்மன் நகர் அருகில், பின்னால் வந்த டாரஸ் லாரி, கங்காதரனின் இருசக்கர வாகனத்தில் மோதி, ஏறி இறங்கியது.இதில், கங்காதரன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அமுலுவை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார், கங்காதரன் உடலை மீட்டனர்.இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அமுலு, சிகிச்சை பலனின்றி காலை 11:30 மணிக்கு உயிரிழந்தார். விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை