உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் மோதி விபத்து பைக்கில் சென்றவர் பலி

கார் மோதி விபத்து பைக்கில் சென்றவர் பலி

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 52. இவர், நேற்று காலை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியாக வந்த கார் அவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு கால தாமதமாக வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து ஏற்படுத்திய வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனர் பியூஸ், 40, என்பவரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை